பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

دد لی۔ அங்கம்-2, காட்சி-4 73 வரவில்லையானுல் உம்மைக் கைது செய்வதோடுசிறையிலிடுவதோடு-வேறு தேவையான நடவடிக்கை களையும் எடுக்க நேரிடும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன். இடைக்கால ஏற்பாடாக உம்மை மூன்ருண்டுகளுக்கு அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறேன் என்பதையும் உணரவும். உடன் பதில். பாண்டி மன்னன் உத்தரவுப்படி-முதல் அமைச்சன்-பெருஞ்சாத்தன். (தூதுவனும் முதற்பணியாளரும் கண்ணிர் விடு கின்றனர். ஒலைவாசிப்போன் வெம்புகின்ருன்.) மாணி : ஏன்? இதற்காக நீங்கள் வெம்பவேண்டாம். ஆட் கொண்ட ஆண்டவன் தன் அடிப்வ்ரை மேலும் மேலும் சோதனை செய்வான் போலும். அவன் நம்மை ஆட்டு விப்பதைப் போலன்ருே நாம் ஆடவேண்டும்: ஆமாம்இந்தப் பெருஞ்சாத்தர் வசமன்ருே நம் பாண்டியன் பொருளை அனுப்பி வைத்தோம். இன்று அவரே கையொப்பமிட்டு இதை அனுப்பியுள்ளாரே! முதற்பணி : அண்ணலே! அன்றே நான் ஐயங்கொண்டேன். அவரும் பழநிக்கொற்றரும் இங்கே வரத் தேவையில்லாத போது வந்து அப் பொருளைப் பெற்றுச் சென்ருர்கள். அதற்கெனத் தாங்கள் யாதொரு கைச்சாத்தும் பெரு மலும் கொடுத்து விட்டீர்கள். நாங்கள் இடையிடுவது தவறு என இருந்துவிட்டோம். அவர்கள் முன்னமே தங்கள் புகழ்கண்டு பொருமை கொண்டிருந்தனர். தங்கள் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றபிறகு அவர்கள் வஞ்சனைச் செயல்கள் ஒன்றும் பலிக்கவில்லை எனக் காலம் பார்த்திருந்தார்கள்-பழிதீர்த்துக் கொண் டார்கள். மாணி : பணியாளரே! பொறுங்கள். அவரை நாம் பழிக்க வேண்டாம். ஆம் நான் கடமையில் தவறியவன்தான்