பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வழுவிலா மணிவாசகர் குதிரையில்லையாயின் நானே அன்ருே அதைப் பண்டாரத்தில் சேர்த்து அரசனுக்கும் அறிவித்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே. இடையில் சிலர் அதைத் தமக்கு வேண்டியவாறு பயன்படுத்திக்கொண் டிருக்கலாம். ஆனல், அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியுமா? இந்நிலையில் நாம் செய்ய வேண்டுவது எப்படி யும் குதிரைகளைச் சேர்க்க வேண்டியதே. முதற்பணி : ஏன்? நாம் உரிய பொருளை அனுப்பி விட்டோமே. மாணி ஆமாம்! அதை எப்படி நிரூபிக்க முடியும்? ஆண்டவன் அறிவார். ஆனல்-அரசர் எப்படி அறிவார்? அவர் இந்த ஒலை அனுப்பியதில் தவறு இல்லையே! முதற்பணி ; எல்லாம் இந்த பெருஞ்சாத்தனும் தங்களுர்ப் பழநிக் கொற்றனும் செய்யும் வேலை என்பதை இன்று நாடே அறியும். தாங்கள் அரசரிடம் நேரில் சென்று எல்லாவற்றையும் சொன்னல், அவர் நிச்சயம் நம்புவ தோடு, அவர்களை நாட்டைவிட்டே வெளியேற்றி விடுவார். - - மாணி : வேண்டாம். அந்த எண்ணம்ே வேண்டாம், அவர்கள் வாழட்டும். தாம் வளர்த்ததோர் நச்சு மாமரமாயினும் கொல்லார். நம்மொடு வாழ்ந்து வந்தவர்களை நாமே அழிப்பதா? வேண்டாம். - முத்ற்பணி : பழநிக் கொற்றன்-ஏன் பெருஞ்சாத்தரும்கூடத் தான் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் உதவியால் எப்படி உயர்ந்துள்ளார்கள். - . . மாணி ஆம்! அதனுல்தான் சொல்லுகிறேன். அவர்களை நாம் காட்டிக்கொடுக்கக் கூடாது என்று. மேலும் நமை யெல்லாம் இயக்கும் ஆண்டவன் அறிவான். இந்தச் செய லுக்கு உரிய பயனை அவனிடம் வேண்டுவதல்லது நாம் என்ன செய்ய வல்லோம்! முதற்பணி : நல்லது; தங்கள் நன்மனம் சிறப்பதாக! தூது வனுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது?