பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。 f அங்கம்-2, காட்சி-4 மாணி : பொறும் நாளை பதில் அனுப்புவோம்-நாம் அனுப்புவதாவது-ஆண்டவன் பதில் தருவான். (தூதுவரை நோக்கி) தூதுவரே! நமது சாலையுள் இரும். நாளைக் காலை யில் பதிலுடன் செல்லலாம் (தூதுவன் செல்ல, காவலன் வருகிருன்.) காவலன் : அமைச்சர் பெரும! செல்வி வஞ்சுளம் தங்களை அவசரமாகக் காணவந்திருக்கிரு.ர். முதற்பணி : என்ன? அவர் ஏன் இங்கு வந்தார்? மாணி : பொறுங்கள்; அவரை வரவிடுங்கள். எல்லாம் ஆண்டவன் செயல். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பதையும் காண்போம். (காவலாளரிடம்) அவரை வரச்சொல். - (வஞ்சுளம் உள்ளே வர) அன்னையே வாருங்கள். அமருங்கள். மதுரையி லிருந்து இப்போதுதான் வருகின்றீர்களோ? ...if வஞ்சு : பெரும! ஆம். இப்போது அங்கிருந்தே விரைந்து வந்து கொண்டிருக்கிறேன். அமைச்சர் பெருஞ்சாத்தர் தங்களிடம் தனிமையில் சில சொல்ல என்னைப் பணித் தார்கள். அதற்குத் தக்கவர் வேறு யாருமின்மையின் பாதுகாவலோடு என்னை அனுப்பி வைத்தார்கள். மாணி : அப்படியா! நல்லது. என்ன சொல்லப் பணித்தார் கள்? - - வஞ்சு : சொல்லுகிறேன் அண்ணுல், ஆனல்-அவர்கள் எல்லாவற்றையும் தங்களிடம் தனிமையில் சொல்லச் சொன்னர்கள். இவர்கள்...... மாணி : இவர்கள் நம்மவர்களே-தாரளமாகச் சொல்ல லாம். - - வஞ்சு : இல்லை. அவர் ஆணை தனிமையில் சொல்லவேண்டும் என்பதே.