பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வழுவிலா மணிவாசகர் மாணி : அப்படியா! அதுவும் ஆண்டவன் செயலே! ஐய! தாங்கள் இருவரும் சென்று வாருங்கள். பிறகு காணலாம். இருவரும் : அப்படியே. (முதற் பணியாளரும் ஒல்ே வாசிப்போரும் செல் கின்றனர். வஞ்சுளம் கண்ணிர் வடிக்கின்ருள்.) மாணி அன்னயிர் ஏன் அழுகின்றீர்கள் சொல்லவேண்டி யதைச் சொல்லலாமே! வஞ்சு : பெரும! தங்கள் கோலத்தைக் கண்டு கண்ணிர் வடிக் காமல் என்ன செய்வது? அமைச்சர் கோலத்தில் தங்கள் அழகார் திருவுருவம் கண்டு கண்டு மகிழ்ந்த அதே இந்தக் கண்களால்-இவ்வாண்டிக் கோலத்தைக் காண வேண்டுமா?. அதோடு இக் கண்களை இழந்துவிடலாமே! மாணி : அன்ய்ை! அதுபற்றி எண்ணவேண்டா. அது என் சொந்தப் பொறுப்பல்லவா. தாங்கள் வந்தது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. வஞ்சு : அண்ணுல் அதற்குமுன் எனக்கு ஒர் ஆசை தாங்கள் தளர்ந்து இருப்பதாக அறிகிறேன். முதலில் தங்கள் உள்ளத்தின் சோர்வு போக்க என் ஆடலைக் காட்டிப் பின் வந்தது பற்றிப் பேசலாம் என இருக்கின்றேன். மாணி : அம்மே வேண்டாம். அவையெல்லாம் இனி அதோ அந்த அழகார் கோயிலில் அமர்ந்துள்ள ஆண்டவன்முன் நடைபெறட்டும். நான் அதையெல்லாம் கண்டு என்ன செய்யப்போகிறேன். வஞ்சு : ஆ! அரசவையில் நான் பரதநாட்டியம் ஆடும் போது தாங்கள் பாராட்டுவீர்களே. தாங்களா அதை வேண்டாம் என்கிறீர்கள். மாணி : இல்லை. நான் கலையை வேண்டாமென்பேன? கலை வாழ்வோடு பின்னியதன்ருே ஆல்ை நீங்கள் இதுவரை