பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-4 79 அரச சபையில் ஆடி ஆடி அலுத்தது போதும். இனி அரசர்க்கரசனை அந்த ஆண்டவன் முன் உங்கள் கல்ை சிறக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆம்! எல்லாம் அவனுக்காகவன்ருே? வஞ்சு : அப்படியா! நல்லது! அதுவே சரியெனக் கொள் வேன். நான் மட்டுமன்று வழிவழியாக வரும் என் மரபினர் அனைவரையுமே ஆண்டவனுக்குப் பணிவிடை செய்து, அவர் முன் அழகார் கலை நலம் காட்டி மகிழு மாறு வழிகாட்டுவேன். மாணி : ஆம்! அதற்கெனவே இனி அமைக்கப்பெறும் இது. போன்ற பெருங்கோயில்களில் கலைக்கூடங்கள் பல இடம் பெறும். ஆனல் ஒன்று. வஞ்சு : என்ன பெருமானே? மாணி : உங்கள் கலேயும் ஆடலும் பாடலும் அனைத்தும் தெய்வ சம்பந்தமுடையதாக-கடவுள் மணம் கமழ்வ தாக இருந்தால் மட்டுமே அவை அனைத்தும் திருக் கோயில்கள்-தமிழ் நாட்டுத் தெய்வ சந்நிதானங்களில் வாழும். ஆனல் அவை அன்ேத்தும் மக்கள் களிப்புக் காகவோ-காம இச்சையை வளர்ப்பதற்காகவோ, வேறு கொடுமைகளுக்காகவோ பயன்படத் தொடங்கு ம்ானல், அன்றே அவை தமிழ் நாட்டுக் கோயில்களி லிருந்து விடுதலை பெற்றுவிடும். தமிழ் மக்கள் தெய்வ நலமும் பண்பாடும் உடையவர்கள். தெய்வ நலம் சான்ற கலைகள் காமக் களஞ்சியங்களாக மாறுமேயா யின், அன்றே அவை கோயில்களிலிருந்து தள்ளப்படும். இந்த உண்மையை மனத்தில் வைத்து உங்கள் தொண் டினைத் தொடங்குங்கள். ஆமாம், தாங்கள் பெருஞ்சாத் தன் சொல்லி அனுப்பியதை இன்னும் சொல்லவில்லையே வஞ்சு : இதோ! (வருந்துவதுபோல் காட்டி) ஐய, தாங்கள் அவர் மூலம் அனுப்பிய பொருள்கள் அனைத்தையும்