பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

έό வழுவிலா மணிவாசகர் அரசரது பண்டாரத்தே அவர் சேர்த்துவிட்டாராம். எனினும் அரசர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தங்கள் மேல் நடவடிக்கை எடுத்துவிட்டாராம். பெருஞ் சாத்தர் எவ்வளவோ தடுத்தும் கேளாது எப்படியும் தங்களை உடனே வேலையிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டாராம். தாங்களேகூட வேலை யிலிருந்து விடுதலைபெற விரும்பினீர்களென அங்குள்ள மக்கள் பேசிக்கொள்ளுகிருர்கள். அதன் விளைவோ இது என்று காட்டி அவர் ஐயப்படுகிருர் என்ருலும் உங்களை நேரில் கண்டு எல்லாவற்றையும் அறிந்துவரக் சொன் ஞர். அவரைத் தாங்கள் தவருகப் புரிந்துகொள்ளா திருக்கக் கேட்டுக் கொண்டார். மாணி : இதில் என்ன இருக்கிறது? அவரை ஏன் நான தவருகப் புரிந்துகொள்ளவேண்டும்? ஆண்டவன் தன் அடியவருக்கு நல்லதை அன்றி, வேறு எதைச் செய்வான் என நினைக்கிறீர்கள். இதோ வாளுேங்கி வளரும் திருக் கோயில் பணியே என் வாழ்நாள் பணி. அதை எண்ணி யே மன்னனுக்கு என்னை விடுவிக்க ஒலை அனுப்பினேன். அது சேர்ந்தாலும்-சேரவில்லை என்ருலும் கவலையில்லை. அவரே எனக்கு விடுதலை அளிக்கிருரே அது சிறந்ததல்ல வா! வேறு எதற்குத்தான் நான் ஏன் அஞ்சவேண்டும்? தாங்கள் நான் புறத்தில் மட்டும் மாறிவிட்டேன் என்றல்லவா கூறினீர்கள்? இல்லை. நான் அகத்திலும் மாறிவிட்டேன். எப்படி? 'நான்யார் என் உள்ளமார் ஞானங்களாா என்னை யாரறிவார் வானேர் பிரான் என்னை ஆண்டிலனேல்' ஆம் ஆண்டான்; நான் அறிவு வரப்பெற்றேன். இனி எனக்கு நல்லது கெட்டது என்று வேறுபாடு இல்லை. எது வரினும் வரட்டும். ஆமாம்-தாங்கள் வேறு என்ன சொல்லவேண்டும்.