பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-4 81 வஞ்சு : இல்லை......(சற்று மெதுவாக) தாங்கள் கோயில் கட்டும் பணம் அரசருடையதுதான் என்று ஒத்துக் கொண்டீர்களானல், இப்போது அவர் மற்ற அனைத் தையும் சரிசெய்து, இப்போது அரசன் அனுப்பிய ஒலையையும் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வதாகச் சொன்னர். அவருக்குத் தெரியும் இச் செல்வமனைத்தும் தங்களுடையதென்று. ஆனாலும், உலகத்தாரும் அரச னும் நம்ப மறுக்கின்றனரே. அதற்காகவே இந்த ஏற் பாடு. ஆண்டவன் பணியானதால் அரசரும் ஒன்றும் சொல்லமாட்டார். மாணி : கவலைப்படாதே. உன் உள்ளம் எனக்குப் புரி கின்றது. நான் பெருஞ்சாத்தனை என்றும் காட்டிக் கொடுக்கமாட்டேன். ஒருவேளை இந்த நிகழ்ச்சிதான் என் வாழ்வையே மாற்றப்போகும் பெரு நிகழ்ச்சியாக லாம். ஆகவே, நல்ல அருள் நெறிக்குச் செல்லும் இந்தப் பாதைக்கு வழிகோலிய பெருஞ்சாத்தனை என்றும் அரசனிடம் காட்டிக்கொடுக்க மாட்டேன். கவலைப் படாதே. வஞ்சு : ஆமாம்! அந்தப் பழநிக்கொற்றன்-ஊர் ஊராய்த் திரிந்துவந்த அவனே, வலிய அழைத்து உயர்ந்த பதவிக் குக் கொண்டு வந்தீர்கள். மாணி : அன்னய்! நீ சொல்லப் போவதும் தெரியும். அவனை யும் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். நான் யார் அவர்களைச் சுட்டுவதற்கு? அவர்கள் தவறு செய்தவர் களே அல்லர். அவர்களை மன்னிக்கும்படி ஆண்டவனி டம் வேண்டுவேன். ஆண்டன் நிச்சயம் அடியவர் வேண்டுகோளை நிறைவேற்றுவான். நீ எதற்கும் கவலைப் படாதே. உங்கள் ஒருவருக்கும் ஒரு தீங்கும் நான் நினைக்கமாட்டேன். என்னைக் காப்பதோ கைதுக் கிவிடு வதோ ஆண்டவன் பொறுப்பு. ஆகவே நீ சென்று வா. வஞ்சு : அண்ணலே! அப்படியே. அடியேன் சென்று வரு கின்றேன். (செல்கிருள்) வ,-6