பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காட்சி-5 மாணிக்கவாசகர் இறைவன் திருமுன் : (வீட்டு வழிபாட்டுக் கூடம்.) பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யால்ை வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி பாயே ஆண்டவனே! செயல்வகை அறியேன், பாண்டியன் பொருளோ திரும்பிவிட்டது. எனது பொருளாலே கோயில் கட்டுகிறேன். குதிரைகளேர வந்து சேரவில்லை. வந்தாலும் வாங்கப் பணமில்லை. ஆயினும் இவற்றுக் கிடையிலே உன் திருக்கோயில் பணி முடிந்து சிறந்தது கண்டு ஆறுதல் பெறுகின்றேன். இனி, பாண்டியனுக்கு என்ன சொல்லுவது? பொருளைப் பெருஞ்சாத்தனிடம் கொடுத்துவிடுத்தேன் என்று சொல்லுவதுதான் பொருந் துமா? அதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? அப் படியே இருந்தாலும் அவனைக் காட்டிக் கொடுப்பதா? அவன் ஏன் வீணுகத் தொல்லைபுற வேண்டும்? பாவம்! அவன் வஞ்சகம் உலகறிந்த ஒன்று என்ருலும் அவனை நான் காட்டிக் கொடுக்கவேண்டாம். ஆம்! வரும் துன் பத்தை நானே ஏற்றுக்கொள்ளுகிறேன். துன்பம்