பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-5 83 வரட்டும்; நல்லதுக்காக எத்தனை துன்பத்தையும் ஏற்றுக் கொள்வேன். ஆனல்-இறைவனே! உன் பொருட்டால் -உன் திருப்பணி செய்வதற்கு நான் பிழைபட்டேன் என்பதை நோக்கத்தான் நான் அஞ்சுகிறேன். உனக் காக நான் பழியை ஏற்றுக்கொள்ளத் தயார்தான்ஆளுல் உலகம் உள்ளளவும். உன் பெருமையும் உண்மை யும் மறைந்தால்- சீ! என்ன எண்ணம்? எப்படி மறை யும்? ஆண்டவன் இருக்கும்போது நெஞ்சே நீ வீண் எண்ணங்களை எண்ணி நையலாமா? வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு, ஆழ்கின்ருய் ஆழாமற் காப்பான ஏத்தாதே சூழ்கின்ருய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்ருய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே' ஆம்! நெஞ்சே அஞ்சாதே! இதோ ஆண்டவன் உள் ளான். அவன் வழிகாட்டுவான், அன்றிக் காட்டாது ஆழ்த்திலுைம் அதிலும் நாம் மகிழ்ச்சி காணவேண்டும். யாண்டும் நீக்கமற நின்ற இறைவனே! இனி என் செயலாவது யாதொன்றுமில்லை; இதோ பாடுகிடக் கிறேன். பாண்டியன் தூதன் வாயிலில் உள்ளான். அவனுக்கு என்ன சொல்லுவது? என்ன செய்வது? எந் தாய்! எந்தாய் எந்தாய்! அசரீரி : அன்பனே! அஞ்சாதே. உடனே தூதுவன் மூலம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று ஒல்ை அனுப்பிவிடு. நீயும் உன் கோயிற்பணியை நிறைவேற்றி விட்டாய். ஆக்வே உடனே புறப்பட்டுச் செல், அவனிடம் நேரிலும் சொல்லிவிடு. எப்படியும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும். மாணி : ஆகா! என்னே அற்புதம்! இறைவனே! உன் கருணையே கருணை!