பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வழுவிலாமணிவாசகர் 'கேட்டாயோ தோழி கிறிசெய்த வாருெருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவம்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மாய்ை! இறைவனே! உன் கருணையே கருணை! யாருக்கும் யாதொரு தீங்கும் வராமல் வலிய ஆட்கொண்ட வள்ளால்! கொண்ட செயல் நன்று நன்று! அண்ணுல்! உன் அருட்டிறம் வாழ்க! இதோ உன் அருட்பணியின் படியே ஒலை அனுப்புகிறேன். ஆயினும் அந்தோ! எப்படி உன்னையும் குருந்த நிழலையும் இக்கோயிலையும் விட்டுப் பிரிவேன்! அதுவே என்னை வருத்துகின்றது. ஆம். எப்படி யும் உன் ஆணைவழி சென்று கடமையை முடித்து நிலை யாக வந்து உன் ஏவல் கேட்பேன். எந்தாய்; எந்தாய்: ஆம். வெளியே பணியாளரும் பிறரும் உள்ளனர். உடனே ஒலை அனுப்புவேன். (வெளியே வருகிருர் முதற் பணியாளர், ஒலைநாயகம், செயலாளர் ஆகியோர் இருக் கின்றனர்.) பணியாளரே உடனே பாண்டிய மன்னருக்கு ஒலை போக்கிவிடும். குதிரைகள் ஆவணி மூலத்தன்று மதுரை வந்து சேரத்தக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. அன்று குதிரைக்கு உரியவர்களே குதிரைகளைக் கொண்டு வருவார்கள் என்பதையும் விளக்கிவிடுங்கள். எனவே நமக்கும் இங்கு வேலை இல்லை. நாமும் உடனே புறப்பட்டு மதுரைக்கு வருகிருேம் என்பதையும் அதிலே தீட்டிவிடுங்கள் (அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கின்றனர்.)