பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3 காட்சி-1 (மதுரையில் பெருஞ்சாத்தனும் வஞ்சுளமும்) வஞ்சு : அத்தான்! அந்தப் பாவி வாதவூரன் மரக்கட்டை ஆகிவிட்டான் அத்தான். நான் வெறும் பரதத்தைக் காணுடா என்று பலமுறை வற்புறுத்தியுங்கூட அவன் மறுத்துவிட்டானே. அத்துடன் இவற்றையெல்லாம் கோயில்களில் வளர்க்க வேண்டுமாம். நானும் எப்படி யாவது அவனை நம் கருத்துக்கு இழுப்பதற்காகச் சரி' என்றேன். அவன் சொல்படி இனி என்றும் கோயிலில், பரதக்கலை வளர்ப்பதாக ஒப்புக் கொண்டேன். என்ரு லும், அவன் இப் பொருளைத் திருப்பி அனுப்பவில்லை என ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிருனே! என்ன செய்வது? பெருஞ் : விடு கவலையை அவன் கிடக்கிருன் மடப்பயல். இந் நேரம் அவன் சிறைச்சாலையில் இருப்பான். என்ன -இந்தப் பெருஞ்சாத்தனை எதிர்ப்பவன் எவன் வாழ்வான்? வஞ்சு : என்ன சொல்லுகிறீர்கள்? பெருஞ் : சொல்லுவதாவது. அந்தப் பயல் பெருந்துறையி லிருந்து வருவதற்கும், சோழன் படையெடுப்பதாகச் சொல்லி அனுப்பியதற்கும் எவ்வளவு பொருத்தம் தெரியுமா? அவன் வந்து, குதிரைகள் என்ருே-ஆவணி மூலமாமே-அன்று வருவதாகச் சொன்னன். ஆனல், அதற்கு முன்பே சோழன் படையெடுப்பைப் பற்றிய செய்தி பாண்டியனுக்கு எட்டும்படி செய்துவிட்டேன். வஞ்சு : என்ன அத்தான்? சோழன் படையெடுப்பா?