பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3, காட்சி-1 87 பெருஞ் கவலைப்படாதே அதுவும் இந்தப் பெருஞ்சாத்தன் வேலைதான். ஒற்றன் ஒருவனைச் சரிப்படுத்தி, நான் அரசனுடன் இருக்கும் சமயத்தில் வந்து இச் செய்தியை சோழ நாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லச் சொன் னேன். - வஞ்சு : ஐயோ! அத்தான் ஒற்றர் அப்படிச் செய்வார்களா? பெருஞ் : பயித்தியக்காரி. இன்று நீ வள்ளுவர் காலத்தில் இருப்பதாக நினைப்போ? அதுபோய் எத்தனையோ நூற்ருண்டுகள் ஆகிவிட்டன. மற்றும் பணம் என்ருல் யார்தான் வாய்திறக்க மாட்டார்கள். இங்கே சில கையாலாகாத பேர்கள்தாம் சத்தியம், தருமம், நீதி என்றெல்லாம் வீணே பேசிக் காலம் கழிக்கிருர்கள். இந்தப் பெருஞ்சாத்தனுக்குக் காரியம் ஒன்றே குறி. வஞ்சு : உங்கள் வீண் பெருமை இருக்கட்டும். பிறகு என்ன நடந்தது? அதைச் சொல்லுங்கள். பெருஞ் : சோழன் படையெடுக்க நினைப்பதற்கு நம் நாட்டில் குதிரைகள் இல்லாமையே காரணம் என்று காட்டினேன். அதற்குக் காரணம் அப் பாவிப் பயல் வாதவூரன் என விளக்கினேன். எப்படியோ என் சொல்லில் மயங்கிய மன்னவன் அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு அவன் வந்தால் தண்டிக்க வேண்டு மென்ருன். நான் தண்டனையைப் பிறகு பார்த்துக் கொள்வோம். முதலில் சிறை செய்யவேண்டும்' என்றேன். அதற்கும் சரி என்ருன். பாவம்! அவன் பொல்லாத வேளை, வாதவூரன் அந்நேரத்திற்குத்தான வரவேண்டும்? வஞ்சு : எவன் பொல்லாத வேளை!-பாண்டியனின் பொல் லாத வேளையா! பெருஞ் : ஏது? குறுக்குக் கேள்வி பலமாக இருக்கிறதே. இனி அந்தப் பண்டாரப் பயலுக்குத்தான் பொல்லாத