பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வழுவிலா மணிவாசகர் வேண்-நமக்கெல்லாம் நேர்மாறு. அரசனும் நம் வழிக்கு வந்து விட்டானே. வஞ்சு சரி சரி-மேலே, பெருஞ் : என்ன கதையா கேட்கிருப்? சரி, சொல்லுகிறேன். அவன் வந்து, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்றுதான் சொன்னன். முன் அனுப்பிய ஒலைகள் பற்றியெல்லாம் பேசினன். அரசன் திடீரென அவன் முகத்தைக் கண்டதும் சற்றுக் கலக்கமடைந்தான். அவன் முகத்தில் என்ன இருக்கிறதோ? திடீரென்று மாறி விடுவானே என்றுகூட நினைத்தேன். வஞ்சு : அதுதான் முகராசி என்பது. என் முகத்தைக் கண்டதும் நீங்கள் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட வில்லையா, பெருஞ் : உன் வேடிக்கையிருக்கட்டும். அப்போது என் மனம் எப்படித் துடித்தது தெரியுமா! அரசனுக்குப் பலவற்றை மறைமுகமாகச் சுட்டிக் காட்டினேன். எப்படியோ முடிவில் அவனைச் சிறையிலிடுமாறு காவ லாளிகளை அழைத்து உத்தரவிட்டான். அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டேன். வஞ்சு : , ஐயோ பாவம் அத்தான்! அவர் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி, உறுதியாகவும் அச் சொல்லைக் காப்பாற்றினரே! . பெருஞ் : யாரடி இவள்? அதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமோ? அது கிடக்கட்டும். அந்தச் சிறைத்தண்டனையைச் சொல்லும்போது அவன் எப்படி இருந்தான் தெரியுமா? வஞ்சு. மிகவும் வாட்டமாக இருந்தான் என்று சொல்லப் போகிறீர்கள்.