பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3, காட்சி-1 89 பெருஞ் அதுதான் இல்லை. அவன் முகம் உண்மையிலேயே மலர்ந்திருந்தது. அவன் பேச ஆரம்பித்து விட்டான். அவனுக்குத் துன்பந்தான் வேண்டுமாம். இன்பத்திலே தன்னை மறந்து மற்றவர்களுக்குத் துன்பம் இழைத்து விடத்தோன்றுமாம். வஞ்சு : என் ராஜாவைப் போல (திருஷ்டி கழிக்கிருள்) அல்லவா? பெருஞ் உன் கிண்டலப் பிறகு வைத்துக் கொள். நல்ல வேளை அவன் சொல்வதையெல்லாம் கேட்க அரசன் இல்லாமல் எழுந்து போய் விட்டான். சிறைக் காவல் இட்டதும் அவனை மெல்ல அனுப்பிவிட்டேன். இப் பயித்தியம் காவலருக்கு இடையில் கண்ணை மூடிக் கொண்டு ஏதேதோ பிதற்றிற்று. இன்பத்தில் அச்சம் கொள்ளுமாம்.-துன்பத்தை வரவேற்குமாம்;அப்போது தான் ஆண்டவனே நினைக்கவேண்டுமாம். அப்போது ஒரு பாட்டுக்கூடப் பாடிற்று. அதை உனக்குக் காட்ட அப் படியே படியெடுத்து வரச் சொல்லியிருக்கிறேன். பழநிக் கொற்றன் கொண்டு வருவான். உண்மையிலேயே அந்த வேளையில் என் மனம்கூட மாறும் போலிருந்தது. -எனினும், கல்லாக்கிக் கொண்டேன். அவன் எதுபற்றி யும் கவலையுருது கண்மூடிப் பாடிக்கொண்டே அக் காவலருடன் சிறைச்சாலைக்குச் செல்லும்போதுதான் எப்படி இருந்தது தெரியுமா?-அதோ பழநிக் கொற்றன் வந்துவிட்டான். அவனிடம் அந்தப் பாட்டு இருக்கும்வாங்கி நீ பாடு பார்க்கலாம். (பழநிக் கொற்றன் வர) கொற்ற அந்தப் பாட்டைக் கொண்டு வந்தாயா? பழகி : ஒ! இதோ! (நீட்டுகிருன்.) பெருஞ் வஞ்சுளத்திடம் கொடு-அவள் பாடட்டும். பழகி : பாடலாம்; இருந்தாலும் அவரைப்போல் உருக்க மாகப் பாடமுடியுமா?