பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3 காட்சி-2 - பாண்டியன் : (தனிமொழி) என்ன கொடுமை ச்ெய்துவிட் டேன் வாதவூரருக்கு? ஆகா! எத்தனை அழகான குதிரை கள் இதுவரையில் நான் இவைபோன்றவற்றைப் பார்த்ததே கிடையாதே. ஏன்? என் நாட்டில் வயதான வரும்கூட நிச்சயம் இவைபோன்ற குதிரைகளைப் பார்த் திருக்க முடியாதென முதுமை அமைச்சரே சொன்னரே. இந்த நிலை தெரியாது அவரைச் சிறைப்படுத்தி விட்டோமே! அவர் சொன்னபடி ஆவணிமூலம் வரையி லாவது எதிர் பார்த்திருக்கக் கூடாதா? எல்லாம் அந்தப் பாவி பெருஞ்சாத்தல்ை வந்த வினை. என் செல்வமனைத் தையும் பாழாக்கிக் கோயில் கட்டிவிட்டதாக அல்லவா அவன் புகார் செய்தான். ஏன்? நம் ஒற்றர்கள்கூட அல்லவா அழகிய கோயில் உயரிய நிலையில் உருவாகி உள்ளதென்று சொன்னர்கள். அதுமட்டுமா? நம் மதுரை நகரத் தெருக்களில் உலவிவரும் ஒற்றர்கள் எங்கும் அந்தப் பெருந்துறைக் கோயிலைப்பற்றிய பேச்சாகவே இருப்பதைத்திானே கூறினர்கள். ஆகவே, கோயில் கட்டியதும் உண்மை, குதிரைகள் வந்ததும் உண்மை. ஆகவே இரண்டிற்கும் பொருளுக்கு என்ன செய்திருப்பார்? நமது பண்டாரத்தே தேவைக்கு மேலும் பொருள் எடுத்துச் சென்றிருப்பாரா? அப்படித் தான் பெருஞ்சாத்தர் சொன்னர். ஆனல், கணக்காளர் கணக்குப்படி, அவர் கணக்குக் கொடுத்ததற்கும், எடுத்துச் சென்றதற்கும் வேறுபாடு இல்லை என்கிரு.ர். ஒருவேளை பெருந்துறையிலிருந்துவந்த ஒற்றர்கள் சொல்லியபடி கோயில் கட்டியது அனைத்தும் அவர் பொருளாகவே இருக்குமோ? ஏன் இருக்கக் கூடாது? ஆனல், இத்துணைப் பெருஞ்செல்வம் எப்படிச் சேர்ந் திருக்க முடியும்? ஆமாம். அங்கே மக்களும் கலைஞர்