பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கியமான தமிழ் நாவல்களை, குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளை, தங்கள் பார்வையில், விரிவான விமர்சனத்துக்கு உட்படுத்தி கட்டுரைகள் எழுதினார்கள்.

நா. வானமாமலையின் ஆராய்ச்சி பத்திரிகை இவ்வகையில் தல்ல பணி புரிந்திருக்கிறது. தா. வச வழிகாட்டலில் ஆய்வில் ஈடுபட்ட சிலர், கவனிக்கப்பட வேண்டிய இலக்கிய விமர்சனங்கள் எழுதியுள்ளனர். நாவல்கள்ை. விமர்சிப்பதற்காக ஆய்வரங்கங்கின்

ஏற்பாடு செய்து இலக்கிய உணர்வை வளர்த்தார்கள்.

இலங்கையில் மார்க்சீய விமர்சகர்களாகப் பெயர் பெற்ற டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி ஆகியோர் முறையான விமர்சனத்தை வளர்த்தவர்களில்

முக்கியமானவர்களாவர்.

தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் தாவல்கள் பற்றி எல்லாம் இவர்கள் ஆய்வு நூல்கள் எழுதினார்கள். ஒப்பியல் ஆய்விலும் ஓரளவுக்கு

ஈடுபட்டார்கள்.

"எழுத்து’ பத்திரிகையின் தாக்கத்தினால், பின்னர் தோன்றிய சிறுபத்திரிகைகள் இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்துவதையும் நடைமுறையாகக் கொண்டன. நடை, கசடதபற, பிரக்ஞை, கொல்லிப்பாவை போன்ற சிற்றேடுகள் இலக்கியத்துடன் நின்று விடாது, நாடகக் கலை, ஓவியம், தெருக்கூத்து முதலியவற்றிலும் அக்கறை காட்டி, அவை சம்பந்தமான விமர்சனக் கட்டுரை

களையும் பிரசுரித்தன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 159