பக்கம்:வாடா மல்லி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 363


கண்டு இளக்காரமாய்ச் சிரித்தார். மற்றவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினார். அப்போதுதான், எல்லோரும் உற்றுப் பார்த்தார்கள். இப்போது வேட்டிகளிையும் லுங்கிகளையும் டவுசர்கள் தெரியும்படி மடித்துக் கட்டி னார்கள். காட்டினார்கள். அடே. இதுகளா.

அந்த அறுவரும், சேர்ந்தாற்போல் நடந்தார்கள். அந்தப் பாதையிலிருந்து ஒரு ஒற்றைப் பாதை பிரியப் போன இடத்தில் மேகலை லேசாய் நின்றாள். அப்போது “ஒம்போதுகடா. எல்லாம் கில்ட் நகைடா” என்ற பேச்சு. அந்த ஏரியாவுக்கு முன்பு சம்பந்தப்படாதவர்கள் மாதிரியான நாகரிக உடைக்காரர்கள். லட்சுமி திட்டப் போனபோது சிரிப்பாய் சிரித்தவர்களை எரித்துப் பார்த்த படியே, மேகலை, அவள் உள்ளங்கையை அழுத்தினாள்லட்சுமியின் வாயை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் அது தான் ஸ்விட்ச் என்பதுபோல் மேகலை, நல்ல சாலை போடப்பட்ட அந்தப் பகுதியை நின்று கவனித்தாள். மளிகைக்கடை, இப்போது பல்பொருள் அங்காடியாய் மாறிவிட்டது. அதே கடைக்காரர்தான். உடையில் மாற்றமில்லை. ஆனால் தோரணையில் ஒரு துரைத்தனம். தொலைவில் தெரிந்த அப்போதைய பளிங்குக் கட்டிடம். இப்போது அக்கம் பக்கமும் கிளைவிட்டு ஒரு குட்டி நகரமாகத் தோன்றியது.

மேகலை, அந்தச் சேரியின் சேரிக்கான வளைவுப் பாதைக்குள் திரும்பினாள். உதட்டைச் சப்புக் கொட்டினாள். மாற்றம் ஏதுமிருந்தால், அது மோசமான மாற்றம். அதே குட்டை. அநேகமாக அப்போதைய தண்ணிர்தான். பல மடங்கு நாற்றம் கொசுக்களின் தொகையும் மக்கள் தொகையைப்போல் பெருகியிருந்தது. அதே எலிவளைப் பொந்துகள், அதே கோழிக்கதவுக் குடிசைகள், அதே தகர டப்பா சுவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/385&oldid=1251115" இலிருந்து மீள்விக்கப்பட்டது