பக்கம்:வாடா மல்லி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சு. சமுத்திரம்


மொட்டை போடுறதாய், பழனி மொட்டையாண்டி கிட்ட வேண்டிக்கிட்டேன். போகும்போதே மொட்டை போட்டுக் கிட்டுத்தான் போகப்போறேன்!”

“என்னடி இது அக்கிரமம். யாரக் கேட்டு இப்படி நேர்ந்தே.கண்ணாடி முன்னால ஒவ்வொரு முடியா, நீவி ரசிப்பியே... இன்னும் விட்டால், தலையைக் கூட வெட்டிக்கிறேன்னு வேண்டுவே போலிருக்கே...”

மேகலை, லட்சுமியக்காவைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். எல்லோரும் அவளை பிரமித்துப் பார்த்த போது, அவள் தன்னை ஒரு சாதாரண மனுவியாக காட்டிக்கொள்ள நினைத்து, தலையை சிறிது குனிந்தாள். அவள் படித்த ஒரு காந்தியப் புத்தகத்தில், ஒருத்தர்’ பிறரிடம் தன்னைப்பற்றி எந்த பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. தோழமை உணர்வே மேலோங்கி நிற்கணும். அவர்களும், நம்மைப்போல் ஆக முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என்று எழுதப்பட்டிருந்தது. அடிக்கடி நினைவுக்கு வருவது போல் இப்போதும் வந்தது. லட்சுமியக்காவின் தோளில் ஒரு கையும், மார்கரெட்டின் தோளில் இன்னொரு கையும் போட்டபடி பொதுப்படையாகச் சொன்னாள்.

“வீட்ட பத்திரமா பாத்துக்குங்க. இந்திரபுரி வீட்டு வாடகைய முதல் தேதியே வாங்கிடுங்க... யாராவது உதவிக்கு வந்தால், கையில இருக்கத கொடுங்க. ஒங்களயும் இவ்வளவு பெரிய வீட்டையும் விட்டுட்டுப் போக சங்கடமாத்தான் இருக்கு.”

“இதுக்குத்தான் நீயும் ஒரு மகள சுவீகாரம் செய்யனும் என்கிறது.”

“தேவையில்ல அம்மா. எனக்கு என் அலித்தன்மையே மகள். அந்த அலித்தன்மை யார் யாரிடமெல்லாம் ஊடுருவி நிற்கோ, அவங்க எல்லாமே என் வாரிசுகள்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/402&oldid=1251370" இலிருந்து மீள்விக்கப்பட்டது