பக்கம்:வாடா மல்லி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சு. சமுத்திரம்


பேசறாங்க. நம்ம சங்கத்துக்கு நிலமும் பார்த்துட்டோம். இப்போதைக்கு அதுல ஒரு நல்ல குடிசையா போட்டுக் கலாம். அதோட சங்கத்தை நீதான் திறந்து வைக்கனும் என்கிறது நம்ம ஜமாவோட தீர்ப்பு. நமக்கும், சர்க்கார்ல வேலைக்கு இடம் ஒதுக்கணும்.குடியிருப்பு தரணும். உதவித் தொகை வழங்கணும். எல்லாவற்றுக்கும் மேல போலீஸ் பொய்க்கேசு முடிவுக்கு வரணும்னு நீ பேசுனது நம்ம ஆட்கள் எல்லோருடைய காதிலயும் இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கு.

“ஆனாலும்-நம்ம ஜனங்ககிட்ட கொஞ்சம் தடுமாற்றம். அலித்தன்மை மாதிரி-அது உடம்போட ஒட்டுனது. இந்தப் பயம் அனுபவத்தோட ஒட்டுனது. போலீஸ் கமிஷனரே, நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போனார். பயப்பட வேண்டாம்னு எல்லாப் போலீஸ் அதிகாரிகளையும் பக்கத்துல வச்சுக்கிட்டே சொன்னார். ஆனாலும், ஒரு வாரத்துலேயே போலீஸ் புத்தியக்’ காட்டிட்டு...சப்-இன்ஸ்பெக்டர் மாறிட்டார். ஆனா, சவடால்தனம் போகலை. ஒன்கிட்ட பயந்து பயந்து பேசினாள் பாரு, லுங்கிக்காரி, அவள நேற்று போலீஸ் வந்து அடிஅடின்னு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. கஞ்சா கடத்துனாள்னு திட்டு. அவளுக்குக் கஞ்சியைத் தவிர கஞ்சா தெரியாது. இப்போ எங்க வச்சிருக் காங்கன்னும் தெரியலை. நான் போனாலும், பழைய பகையில என்னையும் ஏதாவது செய்யலாம். இப்படி போலீஸ் பொய் வழக்கு ஒரு பக்கம்.கோர்ட்லகூட எடுத்த எடுப்புலேயே இவ்வளவு ரூபா அபராதம்னு சொல்றாங்களே தவிர தீர விசாரிக்கிறதில்ல. நமக்கு ரெண்டு பக்கமும் அடி.

“நீ சொன்னது மாதிரி இது தனியாச் செய்யுற காரியம் இல்ல. ஒரு சங்கம் செய்யவேண்டிய காரியம். அதனால, நீ உடனே வரணும். இல்லாட்டால், நாங்க கூண்டோட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/406&oldid=1251388" இலிருந்து மீள்விக்கப்பட்டது