பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி பாட்டாளி முதலாளி யாவரும் ஒன்றே , பங்கிட்டுச் சரிபாதி அடைகுவம் நன்றே , நாட்டில் விளைபொருள் வான்தந்த செல்வம் , நாமொன்ருய் உடுத்துண்டே உயிர்வாழல் இன்பம் ! கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ ? காய்கறி நெல்கூலம் விளேத்தவர் யாரோ ? குடிநீர் நிறைகூவம் சமைத்தவர் யாரோ ? கூடை குடிசை முடைந்தவர் யாரோ ? குளிர்நீக்கப் பல ஆடை நெய்தகை யார்கை ? கோட்டை மதில்சுவர் செய்தகை யார்கை ? களியான மிடறேறி நாட்டினேக் காக்கக் கைவேலும் வாளும் கொடுத்தகை யார்கை ? பலபல அழகாடை தைத்தகை எவர்கை ? பதஞ்செய்து தோலினத் தைத்தகை எவர்கை ? மலேகாடு பாய்ந்தோடும் புகைவண்டி ஊர்தி வரப்போகப் பெரும்பாட்டை ஆக்கிய தார்கை ? அழுக்காடை துசய்மைப் படுத்திய தாள்தோள் ? ஆற்றரை கட்டிநீர் தேக்கிய தார்தோள் ? முழுமீசை அரைமீசை தாடி யொதுக்கி முகத்தில் அழகையுண் டாக்கிய தார்கை ?