பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 அள்ளித் திட்டும் அந்தி வானம்; செக்கர் சிந்திய செந்திச் சுடரை மந்திகள் பார்த்து மருளும்; வழுக்கைக் குட்டிகள் தாய்மடி கெட்டியாய்ப் பற்றும்; சாலேத் தென்னே ஒலே தவழ்ந்து மாலைப் போதின் மாலே நுகர்ந்து மாலே வாழ்த்தும் மாலேத் தென்றல்; கருங்குயில் தோப்பில் விருந்து வழங்கும். மேற்கில் பரிதி மெல்ல நழுவ வீட்டை நோக்கி விரைந்து நடக்கும் மாட்டை ஒட்டி வந்தான் குப்பன். பாடும் அருவி பாடத் துாண்டியது. பாடினன் பள்ளு; தமிழ்ச்சுவை பாய்ந்தது. குப்பன் அவ்வூர்க் குடிகளில் ஒருவன்; முதலியார் வகுப்பு: முதல்சிறி துடையவன்; எழுதப் படிக்க எண்ணத் தெரிந்தவன்; மனேவி இறக்க துணேவிதே டாது வாழ்க்கையில் சலித்து வாழ்ந்து வருபவன்; 'காலம் மக்கள் கருத்தை மாற்றும்! புள்ளும் மாவும் உள்ளம் கிளற எத்தனே போழ்துகாம் இப்படி வாழ்வதோ ? இல்லோர்க் கெல்லாம் இல்லென் னது நல்லறம் செய்ய இல்லறம் பேணக் களேத்துவரு வேளே உளத்துமகிழ் வூட்டத் துன்பம் விலக்கி இன்பம் நல்க அமைச்சு போன்றே ஆய்வுரை கூறத் திருத்திய உண்டி அருத்தி மகிழ மனைவி வேண்டும் மனேவி வேண்டும் ! இப்படிப் பலப்பல எண்ணி நடந்தான். 'அண்மையோ, சேய்மையோ அணிபெறு முதுரர்? 30: 35。 45° 50, 55