பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்கினன்; தாங்கிள்ை. மீண்டும் தாக்கினன்; தாக்குங் தடியைத் தட்டிப் பறித்தாள்: 103 'இதுதான் ஆண்மையோ? இதுதான் ஆண்மையோ ? மலரைக் கசக்கினய், மலர்ச்செடி அழித்தாய் ! மற்றையோர் பேச்சை மறையென நம்பிய்ை ! வஞ்சகர் வாழ வகுத்தார் சாதி; சாதியும் குலமும் காதலுக் கேது ? மேதியும் பெற்றமும் வெவ்வே ருகும்; மடமை யல்லவா மக்களேப் பிரித்தல் ? அன்றே இவையெலாம் ஆழ்ந்துபார்க் காமல் அழித்தாய்; மேட்டும் அழியா திருப்பதோ ?” என்று சீறிள்ை; எடுத்தாள் தடியை 1... ஒடின்ை குப்பன், ஒடின்ை...ஒடினன்... ‘பைத்தியம் ! பைத்தியம் ! பைத்தியம்' என்றே பலரிடம் கூறிப் பட்டம் கட்டினன்; கட்டி வைத்துக் கொட்டி யடக்கினன்; பைத்திய மற்ற பாவையை முற்றிய பைத்திய மாக்கினன் பைத்தியக் காரன் ! உண்மை புணரா உலுத்த மக்கள் பைத்தியம் என்றே பறையடித் தார்கள் ! வஞ்சகர் வாழ மற்றவர் மீது நெஞ்சறி பொய்யை நீட்டிக் கூறுவர்; - ஒத்துக் கேற்ற மத்தளம் இசைக்கும் உதவாக் கரைகள், மட்டிகள் வாழ்ந்ததால் தமிழர் வாழ்விழந் தாரே ! 120. I25 130. 1 35. 140