பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி கொடுமையிலே நசுக்குண்ட மக்கள் நெஞ்சம் கொந்தளிக்க, மேன்மேலும் கொடுமை மீற, விடுபடுவோம், இன்றேல்நாம் வீழ்வோம் என்று மீளவெறி கொண்டெழுதல் புரட்சி; வாழ்க ! அடிமேலோர் அடிவீழ அமியும் ஓர்நாள் அசைந்தாடும்; உயிருள்ள மக்கள் நெஞ்சம் துடிதுடித்துப் பதைபதைத்து வலிய கட்டைத் தூளாக்கத் திரண்டெழுதல் புரட்சி ; வாழ்க 1 ஆண்டானின் கீழிருந்து பசியால் வாடி அடிபட்டு நோயுற்ற ஏழை மக்கள் மீண்டோட வெறுத்தெழுதல் புரட்சி; நூறு மேருமலே தடுத்தாலும் அடங்கா தப்பா ! வேண்டாத கொள்கையினைத் தாங்கித் தாங்கி வெதுப்புற்று மனம்நொந்து வாழ்ந்த மக்கள் ஈண்டுள்ள கொடும்பழக்க வெள்ள ஆற்றை எதிர்த்தேற இறங்குவதே புரட்சி; வாழ்க ! எண்ணத்தில் எழுமாற்றம் புரட்சி! நாளும் எழுத்தினிலும் பேச்சினிலும் அதனேக் காண்போம்; வெண்ணுட்டுப் பெர்னட்ஷா, பிளோட்டோ, லிங்கன், விரும்புலெனின், காரல்மார்க்ஸ், விட்மன், ருசோ, கிண்ணத்தில் தருநஞ்சை அமுதாய் உண்ட கிளர்ச்சிவிதை சாக்ரடீஸ், இங்கர்சால், சன்யாட்சன், கண்ணுெத்த ஈ. வெ. ரா., காந்தி, அண்ணு, கருத்துநிறை வள்ளுவர்சொல் புரட்சி; வாழ்க, ! 8