பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமே இல்லை ! கல்விடு தோட்டம் கொட்டில் கண்கவர் மாடி வீடு - செல்வர்கள் ஆடப் பாடச் சித்திர மாடங் கட்டி அல்பகல் உழைக்கும் கொத்தன் மழைகுளிர் ஒண்ட ஒன்றும் இல்லையே இதனைத் தீட்டப் புலவரீர், மனமே இல்லே ! ஒருசிலர் மாடி வீட்டில் உண்டாடிக் களித்தி ருக்க ஒருசிலர் அவர்கள் வீட்டுக் கோடியில் உடையே இன்றித் தெருவினில் கிடைத்த மிச்சில் தின்றுடல் வளர்க்கக் கண்டும் - பெரும்புல வர்கட் கேனே பேச்சில்லை; மனமே இல்லை ! வான்தரு வளத்தை ஏழை மக்களின் உழைப்பை எல்லாம் நான் சொந்தக் கார னென்று கண்ணிடும் பெரிய செல்வன் தானப்யா கள்வ னென்று. மக்கள்முன் சாற்று தற்கிங்கு ஏைேர்ே தயங்கு கின்றீர்? புலவரே மனமே இல்லே !