பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே போதும் ! அடிமையின் அடிமையாய்ப் பாகூரில் சிலநாள் அரசினரின் பணியேற்று நானிருக்கும் நாளில், துடிதுடித்து நாக்குழற ஒருபறைச்சி வந்தாள்; முள்ளிலவம் மரமுண்டோ ? சொல்லுங்கள் என்ருள்; கடைக்கண்கள் முத்துமுத்தாய் ர்ேசொட்ட கின்ருள்; கைபிசைந்து வான்நோக்கி நெடுமூச்சு விட்டாள்! "இடிவீழ்ந்த தென்னேயைப்போல் இருக்கின்ருய் தோன் 1 என உனக்(கு)? எனக்கேட்டேன்; அவள்சொன்னாள்; - - சொல்வேன்: நேற்ருண்டை வேலைக்குப் GuTಹTI6ು (35TLTEು கின்றுவிட்டான் என்பறையன்; படுத்திருந்தான் வீட்டில்; சோற்றுக்கு வழியற்ற அடிமைகளுக் கிங்கு நோயென்ன ? தூக்கமென்ன ? என்ற தட்டி ஆண்டை, நாற்றுக்கு நீரிறைக்கப் போ’ என்ருர்; கின்ருன்; நட என்று கோலெடுத்தார்; தலேசுற்று தென்ருன்; கூற்ருெத்த நெஞ்சினர்கள் ஆண்டைகளின் கூட்டம்! கூலிக்கு வாயேது ? செல்!” என்றேன்; போனன் ! தடுமாறி நீர்இறைக்க வயலுக்குச் சென்ருன் தன்னுண்டை பேச்சிற்கும் வயிற்றுக்கும் அஞ்சி; உடல்காய்ச்ச லோடேற்றம் மிதித்திட்டான்; தவறி ஒடிந்து விழு நெடுமரம்போல் கிணற்ருேரம் வீழ்ந்தான்; ஒடிந்ததுகால்!” என்ருேடி ஆண்டையிடம் சொன்னேன்; ஒன்றுமில்லை பாசாங்கு ! போடிப்போ!' என்ருர்; துடிதுடிக்கு தென்னெஞ்சம்; எங்களுக்கோர் உதவி மரமெங்கே ? சொல்லுங்க ' எனக்கதறிக் கேட்டாள்!