பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி பாரதிநாள் இன்றடா ? பாட்டிசைத்து ஆடடா ! கற்றகல்வி காட்ட வென்று கவிபுனைந்த தமிழ்மொழி கண்டுகேட்டுப் பொருள் விளங்காக் கசப்புக் கொண்ட நாட்களில் சொற்ருெடரில் இனிமை தந்தான் சுப்ர மண்ய பாரதி ; துTயன் வாழ்க ! வாழ்க வென்று சொல்லிச் சொல்லி ஆடடா ! பாரதி ஒருமனிதன் உணவேயின்றி உயிர்துடிக்கக் கண்டிடில் உருக்குலேப்போம் உலகந்தன்னே ஒன்றுகூடும் என்றவன் அருமைப் பாடல் தமிழகத்தில் அச்சம் போக்கி வருகுது ! அண்டமும் கிழித்தெறியும் ஆற்றல்நமக் கூட்டுது ! பாரதி நாட்டை யாளும் உரிமை சொந்த நாட்டினருக் கல்லவோ? நமது பாட்டன் சொத்தடா நமது நாடு தமிழனே ! நாட்டில் வேறு ஆட்சிசெய்து நம்மை யாள்வ தேதென நாளும்பாடி அறிவளித்தோன் qi நமது பாரதி! ஆடடா ! . பாரதி