பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119. வறுமைநோய் பிடித்து வீட்டில் மனேவி மக்கள் வாட்டிட வாட்டமோடு இந்தியத்தாய் மனத்தில் காட்சி தந்திடச் சிறுமை நீக்கிக் களிப்பினேடு தேசத் தொண்டு செய்தவன் சீர்த்தி இன்று மனத்தில் எண்ணில் திரண்டுதோ ளுயருது ! பாரதி கார்மயில்போல் தமிழர் இங்குக் களித்திருந்த நாட்கள்போய்க் கண்ணிருண்டு அடிமை வாழ்வில் கதிகலங்கி நின்றிடத் தார்மொழியால் உணர்வளித்துத் தலைநிமிரச் செய்தவன் தமிழ்க்கவிகள் வாழ்கவென்று தலைநிமிர்த்தி ஆடடா ! பாரதி