பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் கற்றறிந்த பெரும்புலவர் வடமொ ழிக்குக் கால்வருடிக் கிடந்திட்ட மடமை கண்டு நற்றமிழைத் தனித்தமிழை எழுதிப் பேசி நல்லுணர்வை வளர்த்திட்டீர் 1 விழிப்பைச் சேர்த்தீர் ! பெற்றெடுத்த தமிழ்நாட்டின் அறத்தைப் பண்பை, பெரும்புகழை நிலைநிறுத்தி வைத்தீர் ! கண்கள் பெற்றிழந்தார் போலானேம் ; பிரிந்தோம் உம்மை ! மறைமலேயே உமைநாங்கள் மறக்கப் போமோ ? அயல்நாட்டான் ஆட்சியிலும் அதற்குப்பின்னும் அருந்தமிழால் கொழுத்திட்டோர் ஆள வந்தோர் மயல்கொண்டார் வடமொழிமேல் ; மறந்தார் கன்னி வளத்தமிழைத் தாய்மொழியை, அன்னே ருக்குக் கயல்புலிவில் திறங்காட்டிப் பகையை வீழ்த்திக் கனிதமிழை வாழ்வித்தீர் பிரிந்தோம் உம்மை ! இயலிசைகூத் தின் உருவே தமிழே ! எங்கள் மறைமலேயே உமைநாங்கள் மறக்கப் போமோ ? ஆழ்ந்தகருத் துரையாலே மக்கள் நெஞ்சை அள்ளினர் ; ஆன்ருேரை விளக்கித் தந்தீர்; சூழ்ந்தஇருள் திரைகிழித்தீர்; சோர்வே இன்றித் தோன்றியதை அஞ்சாமல் உரைத்தீர் ; காட்டைப் பாழ்செய்த சாதியினை வீழ்த்தச் சைவப் பாட்டையே சிறந்ததென்றீர் ; யாண்டு நூறு வாழ்ந்திருக்க இயலுமென்றீர்; வழியு ரைத் தீர் : மறைமலேயே உமைநாங்கள் மறக்கப் போமோ ? 3.