பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் தமிழ் மாண்டு அடதாளம் தமிழெங்கள் உயிருட லாமே என்றும் தலே தாழ்த்திக் கைகூப்பி வணங்குவம் நாமே ; அமிழ்தின் இனியசுவை தழிழெனில் பொய்யோ ? அழிவை நினைக்கவுயிர் ஒடுங்குதே அய்யோ ! வாய்விட்டுத் தாய்பேச நாம்கற்ற மழலை வஞ்சியின் தோள்சேர்த்து நாம்கொஞ்சும் குதலே சேய்கிளே கேளொடு வாழ்வினில் என்றும் . தெளிவதும் கேட்பதும் மொழிவதும் தமிழே ! அடிமை மலேபிளக்கும் உளி எங்கள் தமிழே ! ஆண்மைக்கும் வலிமைக்கும் உரமெங்கள் தமிழே ! மடமை இருள்கிழிக்கும் மதிளங்கள் தமிழே ! வற்ருத தேனுாற்ரும் அறிவிற்குத் தமிழே ! தமிழர்க்குத் தமிழெனில் இன்பம் 1 இன்பம் ! சழுக்கர்க்கோ தமிழெனில் துன்பம் துன்பம் ! தமிழர்க்குத் தமிழிசை இன்பம் 1 இன்பம் ! தமிழர்க்குத் தமிழ்மொழி உடலுயிர் என்றும் !