பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளன் வானிடைத் தோன்றும் வண்ணமெலாம் - அவன் மண்ணிடைச் சொல்லால் சித்திரிப்பான் ! தானே தன்னை யாண்டிடுவான் ! - பிறர் தன்னே யாள வெருண்டிடுவான்! காற்று நுழையா விடந்தனிலும் - அவன் கருத்தை யோட்டிக் கதைசொல்வான் ! கூற்றுவ னேவந் தெதிர்த்திடினும் - கொண்ட கொள்கை வழுவான் எழுத்தாளன் ! கல்லேயும் நம்மெதிர் பேசவைப்பான் ! - வீசும் காற்ருய் உடற்கின்பம் தந்திடுவான் ! - புல்லேயும் பொன்னேயும் ஒன்ருக்கிக் - கண்முன் புதுமை செய்வான் எழுத்தாளன் ! காட்டு விலங்கவன் சுற்றமென்பான் ! - கண் காட்சிப் பொருளவன் பாசமென்பான் ! கூட்டி லதிகாலே பாட்டிசைக்கும் - சிறு குருவிக் குலத்திற் கடிமை என்பான்! புணர்ச்சிப் புது இன்பம் போலறிவில் - என்றும் பொங்கிடத் தன்னிதயம் வடித்தே உணர்ச்சிக் கவிச்சவுக் கால் உலகைத் - தட்டி ஒழுங்குடன் ஊக்கும் பாகனவன் ! காலே மகிழ்வோடு பாட்டிசைக்கும் - சற்றும் கவலே இல்லாவானம் பாடியவன் ! ஒலே எடுத்துக் கவிதைபொறித் - திங்த ஊருக் குழைக்கும் பிள்ளையாண்டான் !