பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் கண்டுகொண்டேன் நீல நிறக் கடலே ! உன்றன் கடுந்துயரம் வாய்விட்டுச் சொலவோ ? காதல் கொண்டவனேப் பிரிந்ததினால் வளைஇ ழந்தாய் ; குளுமைவிழி நீர் முத்தைச் சிந்து கின்ருய் ; அண்டைவீட்டுக் காரரிடம் குறையைச் சொல்லி ஆறுதல்கொள் வாருண்டு ; பேதை நீயோ பண்டந்தக் கள்வனிடம் கலந்து வாழ்ந்த பழங்காலம் கினேக்கின் ருய்! கரையென் செய்யும் ? 1 கங்குலிற்சற் றயர்ந்திருந்தால் கனவில் உன்றன் காதலனேக் கண்டிடலாம்; தூக்கம் நீங்கி மங்குகின் ருய்; அடிக்கடிங் எழுந்து வந்து மணற்பரப்பில் வழிபார்த்துத் திரும்பு கின்ருய்; பொங்குகின்ருய்; புரளுகின்ருய்; எழுந்து சீறிப் பொழுதெல்லாம் ஓயாது கலங்கு கின்ருய்; இங்குன்னே காணமிலாள் என்று பெண்கள் இடித்துரைப்பார்; பிரிவெண்ணுர்; சொன்னேன்! சொன்னேன்!! 2 சிறுமாற்றம் நம்மிருவர் இடையே உண்டு; தெளிவற்று நீ இன்னும் வழிபார்க் கின்ருய்; அறுதிசெய்து விட்டேன் நான்; கலங்கேன் என்றும்; அவள்கினேவில் இன்பத்தைக் காண்பேன்! காண்பேன்!! உறுதிசெய்து கொள்மனத்தில்! கலங்கல் கோழை உள்ளத்தின் பாங்காகும்! மற்றும் யாவும் மறைந்தொழியும் மின்னலேப்போல்! ஏங்கி ஏங்கிப் பாழாகிப் போகாதே! மனது மாற்றே! o 3