பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்கி நடந்தேன் வெளித்தாம் இட்டு விளக்கை யணத்துப் படுத்தேன்; என்மனம் படுக்க வில்லை ! குளக்கரை நோக்கிக் குறுக்கு வழியாக வந்தேன்; பூத்த மாமரம் என்னைச் "சச்சர வொன்றைச் சற்றுக்கேள்' என்றது. மேடை மீது மிடுக்காய் இருந்த அரசும் வேம்பும் என்னிடம் நெருங்கி, 'மக்கள் எங்களே வணங்குதல் கண்டு பொருமை கொண்டு பூத்த மாமரம் வம்புக்கு கின்றது ; முறையோ ?? என்றன. “மரத்தை வணங்கும் மக்கட் பிறப்பின் வழிவந் தோயே! வழிவக் தோயே! உயர்வும் தாழ்வும் ஒவ்வா. வணக்கமும் உண்டென் ருெப்புவீர் ! நானெப்ப மாட்டேன் ! கசக்கும் வேம்பும் காசுக் குதவா 'அரசும் மக்கள் அடுதுயர் நீக்குமோ? வேண்டும் பேற்றை விரைவில் அளிக்க யாண்டிவை கற்றன யாதுசெய் வல்லன ? அறிவோ இச்செயல்?’ என்றது மாமரம் ! மறுமொழி கூற வழியிலே ; - - - - வெட்கி நடந்தேன்; மிகநொத் தேனே !! At 0 -

21.