பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிது கொடிது ! கொடிது கொடிது கூற்றம் கொடிது! கொடிதாம் அதனினும் அடுபசித் துன்பம்! கொடிதே அதனினும் குணமிலாப் பெண்டிர்! கொடிதே அதனினும் குடிசெயா மக்கள்! அதனினும் கொடிதே அன்பிலாச் சுற்றம்! அதனினும் கொடிதே அடிமையில் வாழ்தல்! அதனினும் கொடிதே மனத்தில் அச்சம்! அதனினும் கொடிதே அழுக்கா, றுள்ளம்! அதனினும் கொடிதே அறிவிலார் கேண்மை! கொடிதே அதனினும் குறுமனப் பான்மை! மானம் இழந்து மண்ணில் வாழ்தல் அதனினும் கொடிதே அம்ம அதனினும் கொடிது பழந்தமிழ் கெடுமை மறத்தல்! அதனினுங்கொடிதே அஞ்சா தென்றும் |தமிழ்சேர் கலப்பைத் தாக்கா திருத்தல்! அதனினும் அன்ப தும்முடன் கூடிப் பிரிதல் கொடிது! கொடிதே !! 10. 15 IT