பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது யார் ? வர்ணக் கலவைக் குழம்பெடுத்து வானில் வாரிப் பூசுவதார் ? சொர்ணம் உருக்கி அதிகாலே சுடர்ஒளி மண்ணில் பாய்ச்சுவதார் ? விலையில் மணியாம் ஒளிவீசும் விண்மீன் வானில் இறைத்ததியார் ? அலேகடல் நீந்தும் முழுமதியின் அங்கம் தேயச் செய்ததியார்? முட்டைக் கருவைச் செப்பனிட்டு மூக்கும் விழியும் ஆக்கியதார் ? கட்டாங் தரைமேல் சிரித்திடுவெண் காளா னுக்கார் விதைநட்டார் ? மண்ணில் மலரும் பூக்களுக்கு மதுவும் மணமும் புகுத்தியதார் ? வண்ணப் பண்ணிசைக் குயிலினத்தின் வாக்கைச் சீர்பெறத் திருத்தியதார் ? கடையில் விற்கும் மல்கோவா’ கனியின் கொட்டைச் சிறைவீட்டில் அடைத்துப் புழுவை உருவாக்கி ஆதர வோடு காப்பதியார் ? ஆட்டம் ஆட மயிற்குலத்திற்(கு), அழகிய தோகை அளித்ததியார் ? கூட்டைக் கட்டும் நுணுக்கமெலாம் குருவிக் குலத்திற்(கு) உரைத்ததியார்?