பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பச் சொத்து மலர்க்காடு பசியடக்கும் கல்லுணவு; பூத்த மலர்பாடும் தேன்.வண்டு செவிக்குணவு ; பாய்ந்தே இலதழுவி வருதென்றல் உடற்கின்பம் ; தோகை மயிலினத்தின் பெருகடமோ இருவிழிக்குத் தேனும் ! கொலபயின்ற என்னின்பப் பெண்ணுளின் நீலக் கூர் விழியைச் சருகினிலே விரைந்தோடித் தாவும் கலேயினங்கள் காட்டாவோ? பெருமகிழ்ச்சிக் கூத்து ! கவலையில்லை; கருத்தளிக்கும் தனிமை இன்பச் சொத்தாம் ! 1. மேட்டினிலே புதரிடையில் நீண்டுயர்ந்து சாய்ந்த வெள்வேல மரக்கிளேயில் காதலிகள்-புட்கள் பாட்டினிலே மெய்மறப்பேன் ; பழச்சாற்றின் ஒடை ! இரவென்றும் பகலென்றும் பாகுபா டில்லே ! வீட்டினிலே இருப்பதென்ருல் வேப்பங்காய்; சிற்றுார் வீணர்களின் நச்சரிப்போ விளக்கெண்ணெய் ; பூத்த காட்டினிலே திரிவதென்ருல் கற்கண்டாம் ; ஆழ்ந்த கருத்தளிக்கும் மகிழ்வளிக்கும் தனிமை இன்பச் சொத்தாம் 2 குளத்தினிலே தாமரைகள் குறும்புப்பெண் கூட்டம் ! குதித்துவரும் கார்எருமை பரிந்துவரும் தோழன் ! உளத்தினிலே வெறியேற நாண்மறைக்க அல்லி உள்ளுக்குள் ளேசிரிக்கும் ; வானத்தில் திங்கள் வளத்தினிலே பகலெல்லாம் களித்திருந்த வெய்யோன் மலேமறைய வாழ்த்துரைக்கும் முறைவந்த தென்றே ! களத்தினிலே வென்றிகண்ட வீரன்போல் என்றன் கால்விட்ட வழிசெல்வேன்; தனிமைஇன்பச் சொத்தாம் . 8