பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் வாட்ரும் காலம் ! சூல்கொண்ட கருமேகம் மலையுச்சி தாவும் ! தோகைமயில் பூப்புதரில் துணையோ டடங்கும் ! பால்கொண்ட தாய்மடியை இறுகணேக்கும் குட்டி: பசுமூங்கில் தேனடையச் சிதைத்துண்ட மந்தி மால்கொண்ட கடுவன் வால் பாம்பென்றே அஞ்சும் ! மரக்கிளேயில் கருங்குயில்கள் வாயபொத்தி நிற்கும் ! வேல்கொண்ட குறத்தியரின் விழிகண்ட வேடன் மெய்ம்மறக்கும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் ! கூடடையும் இளம்பேடை ஆணின் வழி பார்க்கும் ! குளித்துடலே அழகுசெய்யும் ஒடையிலே சிட்டு! பூடடையும் வண்டினங்கள்! புதரடையும் மான்கள் ! பொழுதடையும் செவ்வானில் ! ஒளியேங்கும் மேற்கில் ! ஆடடையும் பட்டியிலே அழகடங்கும் பூவில் ! அடர்காட்டில் இருளடங்கும் ! ஒலியடங்கும் தோப்பில் ! காடடையும் இருள்திரையுள் ! கண்ணடையும் சோர்வு ! கவலே தரும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் ! படைகலியச் செல்லுகின்ற யானைகளேப் போலக் குளம்விட்டுப் பாய்ந்துவரும் எருமைகளின் கூட்டம் ! நடைமெலிய இடைமெலியப் பெண்கள்சாய்ந் தாடி நடந்துவரும் நீர்மொண்டு ! நடந்துவரும் அந்தி ! பெடை மெவியக் காணுத ஆண்கிளிகள் வீட்டின் பெருஞ்சுவரின் பொந்தடையும் கொம்படையும் சிட்டு ! கடைமெலிய என்கால்கள் நடந்தலுத்துப் போகும் ! கருத்தழிக்கும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் ! 3.