பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i v கூப்பிடு வாழ்வோர் அனைவரையும்; கூப்பிடடி ! காப்பெதற்கு ? கார் தந்த செல்வம் விளைபொருள்கள்! சாப்பாட்டைத் தேக்காதே சண்டை அதன்விளைவாம் பங்காக்கி உண்போம் பசியேது பின்காட்டில் ?” என்ற அடிகளில் பொதுவுடைமை பூத்துக் குலுங்கு கின்றது சிற்றுாரில் மாட்டைத் தேய்த்துக் குளிப்பாட்டி வரும் சிறுவர்களின் உடம்பில் நீர் வடிவதைப் பார்த்த சிறுமிகள்,"...உடலெல்லாம் ஒட்டை ஒட்டை எனக்கூவி ஒடி மறைவார்' என்பதில் நகைச்சுவை ததும்புகின்றது. உரிமை தடுப்பார் இவ்வுலகில் உருக்குலேந்து அழிவார் இடிகரை போல்' என வரும் வரிகளில் உரிமை வேட்கை மிளிர்கின்றது. - வயலை'க் கூறும்போது தன்னலத்தைப் பழிக்கின்ருர். "...உன்னைப் போல ஒவ்வொரு நாளும் உருக்குலேவாரும் உண்டே ' எனக் காதலால் அழிவாரை வாடிய மலர் ” கொண்டு காட்டுகின்ருர், காதல், மலிந்த கடைச்சரக்கு அன்று என்பதையும், மலிவென்று கருதிய வட்டைச் சேவல் பட்டபாட்டையும் பெட்டையும் சேவலும் என்ற தலைப்பில் வரும் கவிதைகளில்,அழகாக வருணித்துள்ளார். இன்பப் பெருக்கை மகளிர் வெளிக்காட்ட மாட்டார்கள்: இளமைச் செய்கை வடுப்போல மாருமல் உள்ளத் திருக்கும் என்ற கருத்துக்களே முதல் முத்த'த்தில் சுவை படத் தீட்டியுள்ளார். தனித்திருக்கும் மகளிரை அந்திக் காலம் எவ்வளவு வாட்டும் என்பதை உயிர் வாட்டும் காலம் என்பதில் காணலாம். அலர் தூற்றில் என்னும் ?' என்ற தலைப்பு, அகப்பொருள் துறை பலவும் அமைந்து சங்க இலக்கியச் சாருகத் திகழ்கின்றது. தலைவனேக் கூடியவளுக்கு அல்லியையும், பிரிந்தவளுக்குத் தாமரையையும் அமைத்து நிகழ்த்தும் உரையாடல் இன்ப ஊற்ருகும்.