பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலத்து நிற்குமோ? பள்ளிக் கிருவரும் இணைந்து போனம் ; பலப்பல பேசிப் பாட்டையில் களித்தோம் ; வெள்ளம் கண்ட நாரையைப் போல விரைந்தோடி விட்டாய் மறக்குமோ கெஞ்சம் ? பொருளும் அழகும் மறைத்ததோ கண்ணேப் ? பூக்கொய்த போழ்து நீசொன்ன யாவும் இருள்விளக் கென்று.நான் களித்தேன் ; மோசம் ஏன்செய் தாய்ரீ ? பெண்களுக் கழகோ ? வடமலே யொருநாள் வயல்வெளி யாகும் , வயலும் ஒருநாள் பெருமலே யாகும் ; கடலும் ஒருநாள் கல்மே டாகும் , காடும் ஒருநாள் பேரு ராகும். மாயும் அழகின் செருக்கால் என்கை மறுத்ததென் நெஞ்சை உறுத்துதல் காண்டாய் ; வேயிரு தோளும் விம்மும் மார்பும் விரிமலர் முகமும் கிலேத்து நிற்குமோ ? நீயும் ஒருநாள் கிழவி யாவாய் ; நினைப்பாய் அன்றே உன் பெரும் தவற்றை ; சாயும் உலகில் யாவும் ஒருநாள் ; என் தமிழ்ப் பாட்டுத் தலதாழ்த் தாதே ! 르