பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது ஒரு நாள் காளே வால்பற்றி முதுகினில் தாவிக் கைதட்டிக் கரணம் அடித்ததும் ஒருநாள் ! கோளரி போன்ற என் சோட்டுச் சிறுவரின் கும்பலில் எங்கும் திரிந்ததும் ஒருநாள் ! மரத்தினில் ஏறி அம்பெனப் பாய்ந்து மலர்க்குளம் அதிரக் குதித்ததும் ஒருநாள் ! கரத்தினில் தாமரைப் பூக்களேக் கொய்து கன்னியர்க் கீந்து களித்ததும் ஒருநாள் ! அல்லியின் தண்டைக் கிள்ளி யொடித்தே அழகுப் பூமாலே தொடுத்ததும் ஒருநாள் ! செல்லி என் அத்தை மகள்கழுத் திட்டுச் சிரித்துக்கை தட்டிக் குதித்ததும் ஒருநாள் ! தோப்புள் நுழைந்து மாங்கனி கவரத் தோகை பவள்முது கேறிய தொருநாள் ! மாப்பிள்ளே பெண்ணுமாய் நாங்கள் இருவரும் வாழ்க்கை நடத்திக் காட்டிய தொருநாள் ! கள்ளமில் என்றன் இளமைத் துடுக்குகள் கட்டாங் தரைப்புல் லானது வாழ்வில் ! உள்ளத்தில் இன்பம் ஊட்டிய நாட்கள் ஒவ்வொன்ருய் வந்தின்று கண்முன்னே கிற்கும் ! நன்று திதறியா இளமனந் தன்னில் நாளும் வளர்த்தனள் காதல் பயிரை , இன்றிiள் யாரோ? எனக்கே துரிம்ை? என்னே ! உலகக் கொடுமையும் என்னே ! 5