பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய்ந்தென்ன ? பேய்ந்தென்ன ? பண்ணுண்டே சாரலில் பாட்டுண்டே ஒடையில் உண்ண உணவேனே அத்தான் ?-நமக்(கு) உண்ண உணவேனே அத்தான் ? கிழங்குண்டு காடெல்லாம் கிளேயெல்லாம் தேனுண்டே உழவுத் தொழிலேனே அத்தான்?-நமக்(கு) உழவுத் தொழிலேனே அத்தான்? கொக்குக் குருகுண்ட்ே குன்ற விலங்குண்டே பக்கத் துறவேனே அத்தான் ?-அக்கம் பக்கத் துறவேனே அத்தான் ? வட்ட் நிலவுண்டே பட்டப் பகல்போலே இட்ட விளக்கேனே அத்தான் ?-எண்ணெய் இட்ட விளக்கேனே அத்தான் ? நீலக் கடலுண்டே நீள்தாழைக் காடுண்டே காலே மலர்ந்தென்ன அத்தான் ?-வானம் காய்ந்தென்ன பேய்ந்தென்ன அத்தான் ?