பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பேனுே இல்லை? எனேக்கண்டு முகம்மலரும் ; நடைமாறிப் போகும் ; இதழிடையே புன்முறுவல் நடமாடும்; வேலின் முனைபாயும் என்விழிமேல்; வாய்திறக்க ஆ ஆ! முருங்கைப்பூ மொட்டுக்கள் வரிசையாய்த் தோன்றும் ; கனேசுவரின் ஒரத்தே பூத்திருக்கும் முல்லே நல்லரும்பை எடுக்கின்ற வேளையிலும் என்மேல் கினேவிருக்கும் ; கண்சிரிக்கும் ; ஆலுை மென்றன் குறைதீர்த்து வாழ்விக்கும் நினைப்பேனே இல்லை ? l காரெடுத்துப் பூத்தொடுத்துக் கொண்டிருப்பாள் ; தம்பி நகர்ந்துவந்து பின்புறமாய் எழுந்திருந்து நிற்க மார்போடு சேர்த்தணேப்பாள் ; கன்னத்தில் முத்த மழைபொழிவாள்; கடைக்கண்ணுல் சிரித்தென்னைப்பார்ப்பாள் ; * ஊருக்குப் போவோமா?’ எனமெல்லச் சொல்லி . . உடன்பாட்டைத் தெரிவிப்பாள் ; உள்ளோடிப் போவாள்; கூர்விழிக்கோ எனக்கண்டால் கொண்டாட்டம்! ஆனல் குறைதீர்த்து வாழ்விக்கும் கினைப்பேனே இல்லே ? 2 பள்ளிவிட்டு வருவேளை வழிபார்த்து நிற்பாள் ; பார்த்தவுடன் பார்க்காது வேறெங்கோ பார்ப்பாள் ; கள்ளவிழிக் கொளிசெய்ய மைதிட்டும் போதும் கருத்திருக்கும் என்மீது ; கிணற்ருேரம் நீரை - மொள்ளுகின்ற போழ்தினிலும் என்பேரைச் சொல்லி முணுமுணுக்கும் செவ்விதழ்கள் துடிதுடிக்கும் பேச் ; கொள்ளேயின்பம் எனக்கண்டால்! ஆலுைம் என்றன் குறைதிர்த்து வாழ்விக்கும் நினைப்பேனே இல்லை? 3