பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வேறெங்கோ நோக்குவதேன்? கார்தவழும் மலேமுகட்டைப் பொற்கையால் தாவிக் கதிர்தழுவும் ; கீழ்வானே மெல்ல இருள் தழுவும் ; வேர்தவழும் பாறையினைக் களிருேடி வந்து மேற்றழுவும் ; மரமேறி ஆண்தழுவும் மந்தி ; நீர்தவழும் சிற்ருேடை பூத்தமலர் தென்றல் வளிதழுவும் ; நீள்கொம்புக் கலைதழுவும் பெண்மான் ; ஏர்தவழும் உன்விழிகள் என்னின்பப் பேழை ! ஏன் தழுவும் வேறெங்கோ ? என்னே டி செய்தேன் ? கோடுயர்ந்த மரக்கிளேயைக் கொடிசுற்றும் ; புள்ளிக் குயில்கூவும் இசைக்கேற்ப ஆறுமுழ வார்க்கும் ; ஆடுயர்ந்த செடிதாவி மேய்ந்திருக்கும் ; பொய்க்கால் அடிபெயர்க்கும் மேய்ப்போன்வாய்க் குழல்கேட்டுச் சூழும் ; காடுயர்ந்த கொன்றையிலே குரல்காட்டும் போத்து ; காதுயர்த்தித் துணேதேடித் துள்ளிமுயல் பாயும் ; பீடுயர்ந்த உன்விழிகள் என்னின்பப் பேழை ! ஏன் தழுவும் வேறெங்கோ ? என்னே டி செய்தேன் ? குட்டையிலே அளிகண்டு பூசிரிக்கும் ; வாழைக் குலேகோதப் பசுங்கிள்ளே ஆணழைக்கும் ; தென்னே மட்டையிலே பெண்ணணிலோ தன் துணேயைத் தாவும்; வாலுயர்த்திப் பாய்ந்துவரும் காளேயினைப் பார்த்துத் தொட்டியிலே நீரருந்தும் ; பசுகத்தி யழைக்கும் ; துணைச்சேவல் குரல்கேட்டுக் குதித்தோடும் பெட்டை, வெட்டியிலே போகுதடி பொன்னை நேரம் ! வேறெங்கோ நோக்குவதேன் ? என்னே டி செய்தேன்? 3