பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GM (L/ கத்தும் செங் குழவி நோயைக் கண்டதற் குரிய செய்வாள்; கொத்துப்பூஞ் சிரிப்பைக் காணக் குலுக்குவாள்; குறும்பு செய்வாள்; சித்திரை துளிர்த்த மாவின் சிறு இலே கால்கை தூக்கி முத்தமோர் கோடி ஈவாள் ; முன்துயர் மறந்து நிற்பாள் ! குந்தவைத் திருகை சேர்த்துக் கொட்டுவாள் ; கொட்டச் செய்வாள் ; தந்தையைக் காட்டச் சொல்வாள் ; தாத்தாவைக் காட்டச் சொல் வாள் ; செந்திரு விரலால் பிள்ளை சுட்டிடச் சிரிக்கக் கண்டு வந்தது கண்ணே (று) என்று வாரிமார்(பு) அணேத்துக் கொள்வாள் ! ஒவ்வொரு சொல்லேச் சொல்லி ஊக்குவாள்; சொல்லச் சொல்வாள் ; செவ்விரு கையைப் பற்றிச் சிறுநடை நடக்கச் செய்வாள் ; கொவ்வைக்குத் தாவும் கிள்ளே, குப்பையில் மேயும் கோழி ஒவ்வொரு நாளும் பிள்ளை உணவுண்ண அழையா நிற்பாள் !