பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சௌமிய ஆண்டுச் செய்தி சூலகத்துக் கார்மேகம் வானில் ஒடித் . துறைதோறும் துறைதோறும் குளிர்மை சேர்க்கும் காலகத்தை மருவாது வறட்சி தேக்கிக் * கடுங்கோடை-ஆக்கியதால் கடந்த ஆண்டுக் கீலகத்தைச் சரிசெய்யும் செளமியத்தைக் - கிட்டிடுவோம்! வாழ்ந்திடுவோம்! பிறந்த ஆண்டு வாலகத்தை கிறைத்திடுக! வறுமை நீக்க வருகவென செளமியத்தை வரவேற் போமே! இவ்வாண்டு வள்ளுவர்க்கோ ஆயி ரத்தை இரட்டிக்கும் புத்தாண்டாம்! வாழ்க! வாழ்க! இவ்வாண்டு புத்தாண்டாம்! அண்ணல் காந்தி இன்றிருந்தால் அவர்வயதோ ஒருநூ றாண்டாம்! இவ்வாண்டு புத்தாண்டாம்! அறிஞர் அண்ணா இன்றிருந்தால் அவர்வயதோ அறுபதாண்டாம்! இவ்வாண்டு செளமியமே மக்கள் வாழ்வில் இன்பத்தை கிறைத்தருள் வரவேற் போமே குளத்தினிலே கீர்நிறைக குளத்தில் பூக்கும் கொடிமலர்கள் மலிந்திடுக! நன்செய் புன்செய் வளத்தினிலே பழுத்திடுக! காட்டில் மேயும் மாடுகன்று கொழுத்திடுக! வறுமை இன்றிக் களத்தினிலே வளம்பெருக்கி இங்கு வாழும் - கற்றோர்க்கும் மற்றோர்க்கும் வாரித் தந்தே உளத்தினிலே அறநெறியை ஒம்பிக் காப்போம்! ஒப்பில்லா செளமியத்தில் வாழ்வோம் நாமே!