பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 தன்னாட்டைப் பொன்னாட்டைத் தான்பிறந்த தாய்நாட்டை அழிப்பதற்குச் சீறி வந்த முன்னாட்டுப் பெரும்படையைக் கொள்ளி வைப்பை முறியடிக்க இயலாத அரசை வாழ்வை மின்னாட்டு வாள்வீச்சால் தனித்து கின்று வெற்றிகொள்ளும் தறுகண்மை மிக்க வீரன் எங்காட்டும் புகழ்பரப்பி காட்டைக் காத்தே .இருந்திறந்து போனசெய்தி கேட்ட துண்டாம்! 4. வான்பெய்ய புல்பூண்டு மரங்கள் தோன்றி மலர்பெய்ய வண்டினங்கள் தேக்கி வைத்த தேன்பெய்ய மலைமுகட்டில் கன்செய் புன்செய் செங்கெல்லும் முக்கனியும் கறவைப் பாலும் கான்பெய்யக் களித்திருந்த அந்த நாளும் களிபெய்யக் கண்டிருக்கும் இந்த நாளும் . கூன்பெய்யும் பிள்ளைமதிப் பாணி பாணன் - குடியரச்ை வளம்செய்தார்; கேட்ட துண்டாம்! 5. நீர்தேக்கி நிலம்விளைத்து கிலத்தின் மீது நெடுமாடக் கூடம்கல் கோட்டை கட்டி ஊர்தேக்கி உயர்வானை முட்டு கின்ற ஓங்கலிடைக் கல்பிளந்து சிலைகள் சிற்பச் சீர்தேக்கிச் செங்கல்லால் கோபு ரங்கள் திருக்குளங்கள் படித்துறைகள்; கோயில் முன்னர்த் தேர்தேக்கி கல்வாழ்வின் செழுமை தேக்கிச் செனறவர்கள் பலராவார் கேட்ட துண்டாம்! 6 பொய்கூட்டிச் சுவைகூட்டிப் புளுகு கின்ற திறமைமிகு போக்கற்ற புலவ ரெல்லாம் மெய்கூட்டிக் கதைத்ததனால் காட்டில் மக்கள் விதிவிதியென்றேமாக்தே சோம்பல் உற்றார்.