பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் நாற்பத்தாறு சீரார் திருக்குவளைக் கண்மணியே! செந்தமிழர் ஊராள வந்த ஒளிக்கதிரே!-, பேரார் கருணா கிதியே! கலைஞனே! மூன்று முரசொடு வாழ்க முனைந்து! கத்து கடல்சூழ் கவின்சேர் திருக்குவளை முத்துவேல் தந்த முதலமைச்சே!- புத்தம் புதுமை அரசைத் தமிழரசைப் போற்றி முதுகுரவர் வாழ்த்த முனை! அஞ்சுகத்தாய் பெற்ற அறிவார் முதலமைச்சே! செஞ்சொற் கலைஞ! திருநாடு-விஞ்சும்கல் அஞ்சாமை கேள்வி அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமல் வாழ்க இனிது! - துள்ளித் திரிகின்ற காலம் துரைத்தனத்தார் பள்ளிப் படிப்பின் மேல் பற்றொதுக்கி-உள்ளத்தில் தாயகத்தின் மேன்மை தனைக்கொண்டாய்! வாழியவே! காய்கதிர்கீ என்றென்றும் காண்! ஏரோட்டு கல்லுழவர் ஏனல் விளைக்கின்ற ஈரோட்டுப் பள்ளி இருந்தாய்ந்து-சீர்நட்ட அண்ணா வழிவந்த ஆன்ற முதலமைச்சே! பண்ணோடு வாழ்க படர்ந்து அண்ணா வழிவந்த ஆரூர் எழுகதிரே! - பண்ணாகும் செந்தமிழ்போல் பாராண்டு-மண்ணில் இளமையோ டின்றுபோல் என்றென்றும் காட்டில் வளமை பெருக்கியே வாழ்!