பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5S 2ொ. சோ. ðíፖ„ வாணிபுர வணிகன் (அங்கம்-3 பிற்பாடு, அந்த ஜாதிப் பட்சிகளெல்லாம் தாயைவிட்டுப் பறந்து போவது சுபாவம்தான். அப்படிச் செய்ததற்காக அவள் நாசமாய்ப் போகட்டும் ! உன்னே கியாயாதிபதி யாக்கினல் அப்படித்தான் தீர்மானம் செய்வாய். என் சொந்த உதிரமும் ஊனும், எனக்கே விரோதியா கிறதா ? கிழப் பினமே இன்னும் அந்த கீனேவா ? இத்தனே வய தாகியும் இந்த விரோதமா ? என் பெண் என்னுடைய சொந்த உதிரமும் ஊனும் என்று சொல்கிறேன். உன் உடலுக்கும் அவள் உடலுக்கும், அட்ட கரிக்கும் அழு கிய தந்தத்திற்கும் உள்ள பேதத்தைவிட, அதிக பேத மிருக்கிறது. அழகிய கோவைக்கும், அவிந்த கொள்ளிக் கும் உள்ள வர்ண பேதத்தைவிட, உங்களிருவருடைய உதிரத்திற்கும் அதிக வித்யாச மிருக்கிறது.-அதிருக்கட் டும், அநந்தகாதருக்குக் கடலில் ஏதாவது கஷ்டம் நேரிட்ட தாகக் கேள்விப்பட்டாயா இல்லையா? சொல் எங்களுக்கு. அதோ, அது ஒரு பேரிழவு. கையிலே இருக்கிறதை யெல் லாம் அழித்துவிட்டு திவாலானன்; தலையைக் காட்ட மாட்டேன் என்கிருன் ரேவில்; முன்பெல்லாம் என்ன ஒழுங் காக வருவான் கடைத் தெருவில், பிச்சைக்காரன்! அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும் என்னே அகியாய வட்டி வாங்குபவன் என்று ஏளனம் செய்தவ னல்லவா ? அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும்! பணத்தை வட்டியில்லாமல் பட்சத்துக்காகக் கொடுப்பவனல்லவா ή அவன் பத்திரத்தின்மீது கவனம் வைக்கட்டும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/62&oldid=900225" இலிருந்து மீள்விக்கப்பட்டது