பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவம மெத்தப் படித்திட்டமேதைகளைக்கண்டு மெய்ஞான சாத்திரங் கேட்கவந்தேன். சித்தகத்தியுடன் செய்கையுடன் ஒரு - சத்தியவானையும் தேடி வந்தேன். தத்துவ சாகரத் தோணிப் பட்டம்பெற்ற ாளர் பெரியாரைக் கண்டுகொண்டேன் வித்தை தெரிந்தவர் வேதம் புரிந்தவர் வாதக்கடற்கரை கண்டவராம்? தித்திக்கவே பேசும் திரமிகுந்தவர் தேன்மழையானவர் திந்தமிழ்நாவலர்: புத்தம் புதுவெள்ளம் போலவர் பேசில்ை புத்தகமாயிரம் வந்துவிழும்! “இத்தரை மாந்தரே! ஈசனைக்கண்டிட ஈகையொன்றேவழி என்றறிவீர்” என்றவர் பேசிய ஏழுநாளில் மக்கள் எட்டு லட்சம்நிதி கட்டித்தந்தார்! தர்மத்துரட்சகர் தர்க்கத்துராட்சஸர் தழிழில் ஆகத்தியன் பட்டத்தந்தார் உருவத்திலும்பெரு உத்தமர்ஏன்ருெரு ஊக்கத்தையும்கூடத் தந்துவிட்டார்: