பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் விஞ்ஞானி; கவிஞன்: பொழிகின்ற மழையூற்றில் சில்லிட்ட மண்துளியின் சிற்றணுவின் மானிடனே: சிற்றறிவுப் புலமையிலே சத்தியத்தின் பேரொளியாய்ச் சுற்றுகிற காலமெனும் சகடத்தை மறந்தாயோ? காலமென்னும் காரணமும் துரமெனும் தொல்லைகளும் கனவுலகில் கதைக்கின்ற கவிஞர்க்குத் தெரியாது. காலக்கன வேகத்தை கடையூழி முடிவுகளை கணக்கிட்டு அதன் விதியை கைப்பிடியில் அடக்கிடுவோம்: கற்றவித்தை காட்டுகிற கேட்டறிவுப் புலவா கேள்! காலமெனும் காடடாறு கரைமீறி ஓடுதடா! கேலிமிகும் உலகெல்லாம் காலம் செய்பாலமடா! கோடியுகக் கதைபலவும் கூவுகிற கற்பனையும் காலமெனும் கவிஎழுதும் கலைமலியும் காவியமாம். 2