பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரியவிழி கனல் ஒளியைக் கக்குதல்போல் கான ஒலி காடெங்கும் ஒலித்தபோது, கானகத்து இருளெல்லாம் காலைபோல கனகமணி ஒளிக்கதிராய் கனலக் கண்டேன். ஒளியற்ற ஊமைக்காட்டில் ஒலிவெள்ளம் இணையும்போது, உயிர்பெற்ற உடலைப் போல உலகெல்லாம் துள்ளி ஆடும். ஒடுங்கிய உடலும் ஊனும் உள்ளமும் உணர்வும் ஆங்கே, ஓங்கிய ஒலி வெள்ளத்தில் உதித்தநல் ஒளியைக் காணும்! கானிலே இருளும் காணுேம் கருமையில் வெறுமை யில்லை வானிலே பனியு மில்லை விண் முகில் இரவும் இல்லை. எழுந்திட்ட ஒலியின் ஜோதி உதவியால் விழிதிறந்தேன் எல்லையின் எல்லை கண்டேன் எங்கிலும் ஜோதிவெள்ளம்: 2I